மாணவர்களின் பாடசாலை உபகரணங்களுக்காக ரூ. 6,000 கொடுப்பனவு; அமைச்சரவை அங்கீகாரம்!
2027 ஆம் கல்வி ஆண்டுக்காக நாட்டிலுள்ள 15 லட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் வீதம் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்திலுள்ள 10 லட்சம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக நிதி வைப்பு செய்யப்படும். மேலும், அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட 5 லட்சம் மாணவர்களுக்குத் தலா ரூ. 6,000 பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும்.
2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், 2027 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்குத் தெரிவித்துள்ளார்.

