ஷிரந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் ஒக்டோபர் 16 வரை நீட்டிப்பு!
அரச வங்கியொன்றிலிருந்து 100 லட்சம் ரூபாயைப் பெற்று முறைகேடாகப் பயன்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்பு மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் இக்குற்றம் தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நிதியைப் பெற்றுக்கொண்ட முறை மற்றும் அதன் பயன்பாடு குறித்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

