கத்தாரில் U-17 வளைகுடா கால்பந்துக் கிண்ணப் போட்டி! – நுழைவுச்சீட்டுகள் விற்பனை ஆரம்பம்!

கத்தாரில் U-17 வளைகுடா கால்பந்துக் கிண்ணப் போட்டி! – நுழைவுச்சீட்டுகள் விற்பனை ஆரம்பம்!

கத்தாரில் நடைபெறவுள்ள GFF U-17 வளைகுடா கால்பந்துக் கிண்ணப் போட்டி 2026க்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் நவம்பர் 4ஆம் திகதி வரை தோஹாவில் நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை 15 கத்தார் ரியால்களுக்கு roadtoqatar.qa இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

இம்முறை கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 10 நாடுகளின் அணிகள் போட்டியிடவுள்ளன. சீனா மற்றும் எகிப்து அணிகளும் விருந்தினர் அணிகளாகப் பங்கேற்கின்றன.

 

மொத்தம் 23 போட்டிகள் மூன்று மைதானங்களில் நடைபெறவுள்ளன. போட்டியின் ஆரம்ப ஆட்டத்தில் ஒக்டோபர் 16ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு கத்தார் அணி சீனாவை எதிர்கொள்ளவுள்ளது.

 

இறுதிப் போட்டி நவம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin