சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்!
சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்தியுள்ளார்.
அப்பாவி மக்களைக் குறிவைத்து அச்சத்தையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்துவதே பயங்கரவாதத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

