ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் அசோக் அபேசிங்க உடனடி விலகல்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் அசோக் அபேசிங்க உடனடி விலகல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அசோக் அபேசிங்க, கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (12) எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

 

இதன்படி, குருணாகல் தேர்தல் தொகுதிப் பிரதம அமைப்பாளர், கட்சியின் பிரதிச் செயலாளர், தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலிருந்து அவர் விலகியுள்ளார்.

 

ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆரம்ப காலத்திலிருந்தும் சஜித் பிரேமதாசவுடன் நெருக்கமாகப் பணியாற்றியதை நினைவுகூர்ந்த அவர், தனக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin