நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.

நாடளாவியரீதியில் இன்று(05.03) முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கைவிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more »

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம்(04.03) வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலைப் பொறுப்பாளராகப் பணி புரிந்து வரும் இளைஞர் ஒருவர் மீது,மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் இளைஞனின்... Read more »
Ad Widget

இணைய பாதுகாப்புச் சட்டம் விரைவில் திருத்தப்படும்-பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம், விரைவில் திருத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று(04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஆராய்வதற்காக பாதுகாப்பு, ஊடகம் மற்றும் நீதி ஆகிய அமைச்சின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி,... Read more »

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போருக்கான விசேட அறிவித்தல்!

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் குறித்த திகதிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எந்தவொரு... Read more »

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்-கலாநிதி பீட்டர் புரூவர்.

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி. பீட்டர் புருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலே இன்று (04.03)செவ்வாய்... Read more »

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில், பெண்களின் ஆரோக்கியம், விழிப்புணர்வு, பாதுகாப்பு, அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப திறன்களை... Read more »

தலதா கண்காட்சி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை தலதா கண்காட்சியை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி... Read more »

இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது!- மனோ கணேசன்

இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது எனவும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வெளியேற்றம் சர்வதேச முதலீட்டாளருக்கு இலங்கை குறித்த எதிர்மறை செய்தியைக் கொண்டு சென்று விட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதானி... Read more »

மாணவனை தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவனை தாக்கி அவரது காது ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் கல்விகற்கும் பாடசாலையின் அதிபர் பாடசாலை நேரத்தில் தன்னைத் தாக்கி... Read more »

மூன்று மாணவர்கள் பயணித்த உந்துருளி விபத்து – ஒருவர் பலி!

கண்டி – உடதலவின்ன பகுதியில் மூன்று மாணவர்கள் பயணித்த உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். 16 வயதுடைய மாணவர்கள் மூவர் உந்துருளியில் பயணித்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இடதுபக்கத்தில் உள்ள மதிலொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள்... Read more »