மாணவனை தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவனை தாக்கி அவரது காது ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தான் கல்விகற்கும் பாடசாலையின் அதிபர் பாடசாலை நேரத்தில் தன்னைத் தாக்கி சித்திரவதை செய்ததாகக் கூறி, 17 வயது மாணவனால் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்திற்குரிய அதிபர், தலைமுடி வெட்டப்படவில்லை எனவும், கருப்பு நிற காலுறை அணிந்து பாடசாலைக்கு வந்ததாகவும் கூறி குறித்த மாணவனை தாக்கியதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin