யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம்(04.03) வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலைப் பொறுப்பாளராகப் பணி புரிந்து வரும் இளைஞர் ஒருவர் மீது,மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் இளைஞனின் கைவிரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய இருவரும் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இருவரையும் கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI