உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போருக்கான விசேட அறிவித்தல்!

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் குறித்த திகதிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் நீடிக்கப்படாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் விண்ணப்பதாரர்கள் தபால் வாக்கு விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI