இணைய பாதுகாப்புச் சட்டம் விரைவில் திருத்தப்படும்-பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம், விரைவில் திருத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று(04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை ஆராய்வதற்காக பாதுகாப்பு, ஊடகம் மற்றும் நீதி ஆகிய அமைச்சின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்

இதன்படி, இந்தச் சட்டத்தைத் திருத்துவதற்காக மூன்று அமைச்சகங்களும் இணைந்து ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று(04) சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே,அமைச்சர் இவ்வாறு  கூறினார்.

அத்துடன், இதுவரை, இணைய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், தண்டிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சபையில்  தெரிவித்தார்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI