சுங்க அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பரிசுத் தொகை

சுங்க அதிகாரிகளுக்கு மற்றும் சுங்க திணைக்களத்துக்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு நிதி அமைச்சரின் அனுமதி எதுவுமின்றி, அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையில் சுமார் 2422 கோடிக்கும் அதிகமாக பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மேலும்,... Read more »

தொழில் நஷ்டம், கடன் தொல்லை: உயிரிழந்த குடும்பத்தினர்

தேனி மாவட்டம் கம்பத்தில், கேரளாவைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும்மகன் ஆகியோர் காருக்குள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் தோல்வி காரணமாகவே இவர்கள் இவ்வாறு முடிவு எடுத்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தின்... Read more »
Ad Widget

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை: காலவரையின்றி ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் (19) என கூறப்பட்ட நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாம் 14 ஆம் திகதி... Read more »

தரமற்ற மருந்து விநியோகம்- தேசியக் கணக்காய்வு அறிக்கை தகவல்

மருந்துகளின் தரத்தை குறைந்தபட்ச வழியில் பரிசீலித்து அல்லது பரிசீலிக்காது இந்நாட்டுக்கு வரவழைத்து நோயாளர்களை அபாய நிலைக்குத் தள்ளிய தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் அப்போது இருந்த தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவற்றை அனுமதித்த நிர்வாகக்குழு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு... Read more »

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று

சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 05 ஆம் திகதி முதல் 11 திகதி வரை மாத்திரம் சுமார் 26,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் 250 பேர் வைத்தியசாலைகளில்... Read more »

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளாவிய ரீதியில் எதிர்வரும் ஜூன் மாதம் முழுவதும் இடம்பெறவுள்ள ஓரினச்சேர்க்கையாளர்களின் (LGBTQ) கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்டு தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கொண்டாட்டங்களின் போது... Read more »

மின் துண்டிப்பால் சுமார் இரண்டு இலட்சம் பேர் இருளில்

இலங்கைத்தீவில் சுமார் இரண்டு இலட்சம் பாவனையாளர்களின் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மின்சார இணைப்பை இன்னும் அவர்கள் மீளப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அண்மைய காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 8 பேரின்... Read more »

இன்று எதுவெல்லாம் சாதனையாக மாறிவிட்டது என நினைக்கையில் சிரிப்பாகவுள்ளது..

அண்மையில் சம்மாந்துறை கல்வி வலயத்துக்கு கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவரை நியமித்தது சாதனை என ஒரு அரசியல் குழுவினர் உரிமை கோருகின்றனர். எதுவெல்லாம் எமது அரசியல் வாதிகளின் சாதனையாகிவிட்டது என பார்த்தீர்களா? இவர் நியமிக்கப்படாது விட்டால், இன்னுமொருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இதிலென்ன சாதனை உள்ளது.... Read more »

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்: சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் விளக்கமளித்தார்

இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்: கனடாவில் இலங்கை இராஜதந்திரிகளுக்குப் பதிலளிக்க சிரமம்

திருகோணமலை – சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் அண்மையில் நால்வர் கைது செய்யப்பட்டமை மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் கனடாவிலுள்ள இலங்கை இராஜதந்திர அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு வாழ்கின்ற நிலையில் இலங்கை... Read more »