அண்மையில் சம்மாந்துறை கல்வி வலயத்துக்கு கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவரை நியமித்தது சாதனை என ஒரு அரசியல் குழுவினர் உரிமை கோருகின்றனர்.
எதுவெல்லாம் எமது அரசியல் வாதிகளின் சாதனையாகிவிட்டது என பார்த்தீர்களா?
இவர் நியமிக்கப்படாது விட்டால், இன்னுமொருவர் நியமிக்கப்பட்டிருப்பார்.
இதிலென்ன சாதனை உள்ளது. இவர்களின் இக் கூற்றின் மூலம் தற்போதைய நியமனமும் அரசியலை அடிப்படையாக கொண்ட நியமெனமென்பது துல்லியமாகின்றது. இது போன்ற அரச நியமனங்களில் அரசியல் தலையீடுகள் ஏற்க இயலாத ஒன்று. இதுவும் சாதனை என கூறி புள்ளி போடுமளவு எமது அரசியல் வாதிகள் ஆளுமையுடையவர்கள்.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையானது தற்போது நியமிக்கப்பட்டவர் இல்லாமல் வேறு ஒருவரை கல்வி பணிப்பாளராக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. இவர்களின் இந்த பரிந்துரையில் பொது நலம் எதுவுமில்லை. அது முற்றிலும் சுய நலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தீர்மானமாகவே இருந்தது.
அங்குள்ள ஒரு சிலரின் சுயநலத்துக்காக பொதுச் சபையொன்றை தவறாக பயன்படுத்துவதையும் ஏற்க முடியாது. பிழையொன்று நடந்தேறும் போது, அதனை தட்டி கேட்கும் முழு உரிமையும் சம்மாந்துறையின் முச் சபைகளுக்குமுண்டு. ஒருவரின் பதவியை இன்னுமொருவருக்கு வழங்க, இவருக்கே இதனை வழங்க கூறும் அதிகாரங்கள் ஒரு பொதுச் சபைக்கில்லை.
சம்மாந்துறை கல்வி வலய கல்வி பணிப்பாளராக மாற்று மத சகோதரரை குறுக்கு வழியில் நியமித்து, அவர் மூலம் இடமாற்றத்தில் உழைக்கலாம் என ஒரு புரோக்கர் குழுவினர் முயற்சித்தனர். பாரிய சதிகளும் திட்டமிடப்பட்டிருந்தன. இதில் சம்மாந்துறை சமூகம் விழிப்படைய, அது அப்படியே கை விடப்பட்டு, அக் குறித்த நபர் வேறொரு இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த சவால் மிக நீண்ட காலம் முன்பே சாதாரணவே எதிர்கொள்ளப்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மை.
சாதனைகள், சாதிக்க வேண்டியவைகள் எத்தனையோ இருக்க, இதெல்லாம் சாதனை என கூறி, நாம் ஏமாறும் நிலையிலா இருக்கின்றோம்