மின் துண்டிப்பால் சுமார் இரண்டு இலட்சம் பேர் இருளில்

இலங்கைத்தீவில் சுமார் இரண்டு இலட்சம் பாவனையாளர்களின் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மின்சார இணைப்பை இன்னும் அவர்கள் மீளப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அண்மைய காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 8 பேரின் மின்சார கணக்குகள் மின்சார சபை மூலம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மின்சாரத்தை துண்டித்து 90 நாட்களுக்குள் மீண்டும் மின்சார தொடர்பை பெற்றுக்கொள்ளத் தவறும் பாவனையாளர்களின் மின்சார தொடர்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்சார கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தாத காரணத்தால் மின் பாவனையாளர்களுக்கு 2022ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையில் சுமார் 3 கோடிக்கு அண்மித்த சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மேலும், மின்சார கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தாத காரணத்தினால் 13 இலட்சத்து 8 ஆயிரத்து 871 பேரின் மின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin