சுங்க அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பரிசுத் தொகை

சுங்க அதிகாரிகளுக்கு மற்றும் சுங்க திணைக்களத்துக்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு நிதி அமைச்சரின் அனுமதி எதுவுமின்றி, அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையில் சுமார் 2422 கோடிக்கும் அதிகமாக பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் சுங்க அதிகாரிகளின் மேலதிக நேர கொடுப்பனவில் சுமார் 200 கோடி ரூபாயை செலுத்தியுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

எனினும், அதன் மூலம் அரசாங்கத்திற்கு வரவு வைக்கப்பட்ட தொகை சுமார் 20 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுங்கத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு பங்களிப்பு வழங்காத அதிகாரிகளுக்காக பரிசுத் தொகை வழங்குமாறு உள்ளக கட்டளைகளை உருவாக்கி பரிசுத் தொகை வழங்கியுள்ளதாக கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

சாதாரணமான பணிகளை வெளிப்படுத்தப்படுத்தினாலும் கூட, சுங்க தவறுகளை கண்டறிதல் எனக் கருதி ஊழியர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் சேவைக்கு சமூகமளித்தால் மாத்திரம் கூட அவர்களுக்கு சம்பளம், மேலதிக கொடுப்பனவு போன்றவை வழங்கப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, சுங்க அதிகாரிகளின் நாளாந்த கடமைகளுக்காகவும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் தங்களது வருகை மற்றும் வெளியேறுவதை பதிவு செய்ய கைரேகையை பதிவு செய்யும் இயந்திரத்தை பயன்படுத்துவது அவசியம் எனினும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தன்னிச்சையான வருகை ஆவணத்தை மாத்திரம் பயன்படுத்தி வருவதாக கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த தகவல்கள் இலங்கையின் சுங்க நிதி மேலாண்மை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin