தொழில் நஷ்டம், கடன் தொல்லை: உயிரிழந்த குடும்பத்தினர்

தேனி மாவட்டம் கம்பத்தில், கேரளாவைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும்மகன் ஆகியோர் காருக்குள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் தோல்வி காரணமாகவே இவர்கள் இவ்வாறு முடிவு எடுத்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னணி

தேனி மாவட்டம் – கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் நெடுஞ்சாலையில், சேனைஓடை அருகே கேரள பதிவெண் கொண்ட கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இதில் 3 பேர் இருக்கையில் சரிந்தபடி இறந்து கிடந்தனர்.

அவ்வழியாக காட்டு வேலைக்குச் சென்ற சிலர், இதைப் பார்த்துவிட்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிஸார் அங்கு சென்று சோதனையிட்டபோது, இறந்தவர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கேரள பொலிருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொழில் நஷ்டம், கடன் தொல்லை

இறந்தவர்கள் கோட்டயத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஜார்ஜ் சக்காரியா (60),அவரது மனைவி மெர்சி (56), மகன் அகில்ஜார்ஜ் (29) என்பதும், தொழில் நஷ்டம், கடன் தொல்லை காரணமாக காருக்குள்ளேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் இருந்து தெரியவந்தது.

தொடர்ந்து, மூவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin