மறுபடியும் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம்..!

மறுபடியும் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம்..! கண்டியில் கடந்த 27 ம் திகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை தற்காலிகமாக ஊர் மக்கள் அமைத்த நிலையில் நேற்றிரவு (17.12.2025) அந்த பாலமும் அடித்துச் செல்லப்பட்டது கண்டி – மடுல்கலை – நெல்லிமலை அரசாங்கப் பிரிவில்... Read more »

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..!

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..! கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »
Ad Widget

கொத்மலை – ரம்பொடவில் மீட்கப்பட்ட மனித கால் – 21 பேர் மாயம்

மோசமான காலநிலை காரணமாக கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு பெண்ணின் கால் என சந்தேகிக்கப்படும் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார். கொத்மலை... Read more »

அனஸ்தீசியா மருந்தினால் இருவர் மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

அனஸ்தீசியா (மயக்க மருந்து) தொடர்பில் பயன்படுத்தப்படும் ‘ஒன்டன்செட்ரான்’ (Ondansetron) மருந்துத் தொகுதியினால் இருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். மயக்க மருந்து வழங்கும்போது ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுப்பதற்காகவே பொதுவாக இந்த ‘ஒன்டன்செட்ரான்’ பயன்படுத்தப்படுவதாக... Read more »

ஜனாதிபதியின் இராணுவ நியமனம் – மீண்டும் நிராகரித்தது அரசியலமைப்பு பேரவை !!

ஜனாதிபதியின் இராணுவ நியமனம் – மீண்டும் நிராகரித்தது அரசியலமைப்பு பேரவை !! புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ.ஆர். ராஜசிங்கவை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த சிபாரிசை அரசியலமைப்பு பேரவை இன்று (17) உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது. சபாநாயகர்... Read more »

அம்பிட்டிய தேரர் சரணடைந்த பின் பிணையில் விடுவிப்பு..!

வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர், நேற்று (17.12.2025) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன்போது அவரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த மேல் நீதிமன்ற நீதிபதி... Read more »

3,200 ரூபாய் லஞ்சம் பெற்ற போக்குவரத்துப் பொலிஸ் சார்ஜன்ட் கைது..!

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்குவதற்காக 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி,... Read more »

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு..!

முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்குத் தயாராக இருந்த சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளைக் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (17) மீட்டுள்ளனர். முல்லைத்தீவு – சாலைக் கடற்கரை ஊடாகக் கஞ்சா கடத்தப்படவுள்ளதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,... Read more »

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை..!

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (19) அதிகாலை 2.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(17.12.2025) புதன்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில், காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்... Read more »