காசா தாக்குதல்களின் மூன்றாம் ஆண்டு நிறைவு!!
ஒளிரும் குண்டுகளை (Flares) வீசி காசா மக்களை அச்சுறுத்திய இஸ்ரேல்!
காசா மீதான இஸ்ரேலின் தீவிரமான தாக்குதல்களின் மூன்றாம் ஆண்டு நிறைவை
பாலஸ்தீனர்கள் நினைவுகூர்ந்து கொண்டிருந்த வேளையில், தெற்கு காசாவின் அல்-மவாசி பகுதியில்
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு மேலே இஸ்ரேலிய போர் விமானங்கள் தாழ்வாகப் பறந்து ‘ஃப்ளேர்’
ஒளிரும் குண்டுகளை வீசி அச்சுறுத்தலில் ஈடுபட்டன. அக்டோபர் 6 அன்று இரவு நடைபெற்ற
இச்சம்பவத்தால் அல்-மவாசி பகுதியில் தங்கியுள்ள இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்களிடையே மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படுமோ என்ற கடும் பீதி ஏற்பட்டது.

