மொசாட் உளவுத்துறையின் பின்னணி…

மொசாட் உளவுத்துறையின் பின்னணி…

சந்தேகங்களை கிளப்பும் ஃபிளை துபாய் விமான கடத்தல்!

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஃபிளை துபாய் விமானத்தை,

ஓமானைச் சேர்ந்த சக விமானி நடுவானில் கடத்தி, தரையில் மோதி விபத்துக்குள்ளாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும்.

எனினும், இச்சம்பவம் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் திட்டமிட்டு நடத்திய நாடகம் என்று ஈரான் மற்றும் சர்வதேச

அரசியல் வல்லுநர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது குறித்து பல்வேறு சர்வதேச ஊடகங்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

காசா போர் காரணமாக ஐ.நா சபையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றிய போது, எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் அவையை விட்டு வெளியேறி இஸ்ரேலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த உலகளாவிய விரோதப் போக்கை மடைமாற்றவும், இஸ்ரேல் மீது சர்வதேச சமூகத்தின் பரிதாபத்தை ஏற்படுத்தவும்,

உள்நாட்டு எதிர்ப்புகளைச் சமாளிக்கவும் இச்சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளையில், சம்பவத்தில் தொடர்புடைய ஃபிளை துபாய் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமானது என்பதும்,

விமானத்தைக் காப்பாற்றிய பிரதான விமானி ஒரு இந்தியர் என்பது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin