ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது என்று மீண்டும் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,

அங்குள்ள அமெரிக்கக் கடற்படையின் இருப்பை ஈரானுக்கு எதிரான ஒரு பயனுள்ள முற்றுகை நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.

 

இதனால், உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.

 

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல நாடுகள் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,

 

அமெரிக்கா – ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

 

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதி என்றும், ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது என்று டிரம்ப் தெரிவித்தார்.

 

பின்னர் வளைகுடா நாட்டின் வரைபடத்தில் ஹோர்முஸ் நீரிணை உள்ள பகுதியை வட்டமிட்டு,

 

அதனை டிரம்ப் நீரிணை என்று குறிப்பிட்டுள்ள ஒரு படத்தை டிரம்ப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin