அஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள மெல்போர்ன் நகரத்திற்கு கிழக்கே இன்று அதிகாலை 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2.01 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக ஜியோசயின்ஸ் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. மெல்போர்னிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தென் கிப்ஸ்லாந்தின் அரவட்டா பகுதி நிலநடுக்கத்தின் மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நில அதிர்வை உணர்ந்ததாக 15,000-க்கும் மேற்பட்டோர் தகவல் வழங்கியுள்ளதுடன், மெல்போர்ன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் தூக்கத்தில் இருந்து எழுந்ததாகவும், வீடுகள் சுமார் 10 விநாடிகள் குலுங்கியதாகவும் கூறியுள்ளனர். எனினும், இதுவரை உயிர்சேதம் அல்லது காயமடைந்தோர் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

