ஒங்ஹான்-லே-பான் (Enghien-les-Bains) தொடருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட கைப்பை

ஒங்ஹான்-லே-பான் (Enghien-les-Bains) தொடருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட கைப்பை

இன்று பிற்பகல் 14:33 மணியளவில், ‘கார் து நோர்’ (Gare du Nord) நோக்கிச் செல்லும் ‘H’ வழித்தடத்திலுள்ள ஒங்ஹான்–லே-பான் தொடருந்து நிலையத்தின் இருக்கையொன்றில் கைப்பை ஒன்று மறதியாக விடப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பையானது உடனடியாக அந்நிலையத்தின் கருமபீடத்தில் கடமையிலிருந்த அதிகாரியிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொருளை மீளப்பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்:

இந்தக்கைப்பையின் உரிமையாளர், பிரான்சின் தேசியத் தொடருந்து நிறுவனத்தின் (SNCF Gares & Connexions) அதிகாரபூர்வ இணையத்தளத்தினூடாகத் தமது ‘பொருள் இழப்புப் புகாரை’ (Declaration of loss) இணையவழியாக உடனடியாகப் பதிவு செய்தல் வேண்டும்.

நேரில் பெற்றுக்கொள்வதானால் ஒங்ஹான்-லே-பான் (Enghien-les-Bains) நிலையத்திற்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்போது உரிமையாளர் தமது அடையாள அட்டையைக் காண்பிப்பது கட்டாயமாகும்.

அத்துடன், பொருளின் பெறுமதியைப் பொறுத்து 5 யூரோக்கள் அல்லது 10 யூரோக்கள் மீட்புக் கட்டணமாகச் (Restitution fee) செலுத்த வேண்டியிருக்கும்.

தபால் மூலமான சேவை: உரிமையாளர் பிரான்சில் வசிக்காத பட்சத்திலோ அல்லது நேரில் வர முடியாத நிலையிலோ, உரிய தபால் கட்டணத்தை ஏற்றுக்கொண்டு குறித்த கைப்பையைத் தமது வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்குமாறும் கோர முடியும்.

Recommended For You

About the Author: admin