பிரான்ஸில் சளி, தொண்டை வலி, தலைவலி… 

பிரான்ஸில் சளி, தொண்டை வலி, தலைவலி…

முன்கூட்டியே தாக்கும் வைரஸ் குறித்து எச்சரிக்கை

இலையுதிர் காலம் தொடங்கியுள்ள நிலையில், பல வகையான வைரஸ்கள் மீண்டும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளன.

 

குறிப்பாக கோ விட் சந்தேகத்தின் பெயரில் மேற்கொள்ளப்படும் கலந்தாலோசனைகள் 76 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் தொண்டை வலி, தலைவலி அல்லது மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

 

இந்த அறிகுறிகளால் மருத்துவர்கள் பரிசோதனைகளின் எண்ணிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

மக்கள் ஒன்றிணைந்து பழகும் இந்த காலகட்டத்தில்தான் வைரஸ்கள் மீண்டும் எழுச்சி பெறுகின்றன என்று மருந்தாளர் தெரிவித்துள்ளார்.

 

கழிவுநீரிலும் இதன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

 

இந்த வைரஸ் பரவலின் தாக்கம் முந்தைய ஆண்டுகளை விடக் குறைவாக இருந்தாலும்,

 

இது முன்கூட்டியே தொடங்கியிருப்பது நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 13-ஆம் திகதி கோ விட் தடுப்பூசி இயக்கம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,

 

அதற்கு முன்பாகவே தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்க வேண்டும் என சுகாதாரப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Recommended For You

About the Author: admin