பாரிஸுக்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொள்ளும் போப் லியோ !!

பாரிஸுக்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொள்ளும் போப் லியோ !!

15,000 பாதுகாப்புப் படையினருடன் தீவிர ஏற்பாடுகள்!

போப் லியோ (Pope Leo) வரும் செப்டம்பர் 25 முதல் 28 வரை பிரான்ஸுக்கு மேற்கொள்ளவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துக்கான பாதுகாப்பு,

 

மருத்துவம் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாரிஸுக்கு 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு போப் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால்,

 

பிரான்ஸ் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்தப் பயணத்தின் பாதுகாப்பிற்காகச் சுமார் 15,000 பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் களத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

 

நாட்டின் முக்கிய வழித்தடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

வத்திகனுக்கென சொந்தமான தனி விமான சேவை இல்லாததால், வெளிநாட்டுப் பயணங்களுக்கு வணிக முறை விமானங்களே வாடகைக்கு அமர்த்தப்படுகின்றன.

 

இப் பயணத்தின் போது போப் அவர்கள் முன்புற இடது பக்கத்தில் உள்ள 1A இருக்கையில் அமர்ந்து பயணிக்கவுள்ளார்.

 

இவருடன் சுமார் 40 வத்திகன் பாதுகாப்பு அதிகாரிகளும் சுவிஸ் காவல் (Swiss Guard) படையினரும்,

 

சுமாா் 80 ஊடகவியலாளர்களும் உடனிருந்து பயணிக்கின்றனர். பாதுகாப்பைத் தாண்டி மருத்துவக் குழுவினரிடம் போப்பின் ரத்த வகைக்கு ஏற்ற ரத்தம் எப்போதும் கையிருப்பில் வைக்கப்படுவதுடன்,

 

செல்லும் நாடுகளில் மருத்துவமனை அறைகளும் தயார் நிலையில் வைக்கப்படும்.

 

போப் பயணத்திற்குப் பயன்படுத்தும் வெள்ளை வாகனம் முன்கூட்டியே அனுப்பிவைக்கப்படுவதுடன், பாதுகாப்பிற்காக மாற்று வாகனமும் எப்போதும் தயாராக இருக்கும்.

 

“அனைத்தும் நொடிக்கு நொடி மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட வேண்டும்” என வத்திகன் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended For You

About the Author: admin