22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: மனுக்கள் மீதான பரிசீலனை தொடர்கிறது
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை இன்று (02) தொடர்கிறது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகிறது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முன்பாக இந்த மனுக்கள் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
தற்போது, 22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்த மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் தங்களுடைய வாதங்களை முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

