வெளியானது 2026 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு

வெளியானது 2026 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு: முடிவுகளை இணையத்தில் அறிவது எப்படி?

2026ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களது பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான doenets.lk ஊடாக பரீட்சை சுட்டெண்ணை உள்ளிட்டுப் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை கடந்த மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை நிலையங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 2,94,089 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இவர்களில் சிங்கள மொழி மூலம் 2,20,366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73,723 மாணவர்களும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை மீள்மதிப்பீடு தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin