கொழும்பின் பல பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நாளை (03) இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

இதன்படி நுகேகொடை, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ, கட்டுபெத்த, கொழும்பு 06, செத்சிறிபாய, ஹேவ்லொக் வீதி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளது.

 

எனவே, பொதுமக்கள் தமக்குத் தேவையான நீரை முற்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்வதோடு, இக்காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin