இளவரசர் ஹாரி மற்றும் பிரபலங்களைக் கொண்ட மற்ற மனுதாரர்கள் தொடர்ந்த தனியுரிமை வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, Daily Mail பதிப்பகத்தின் சட்டச் செலவுகளுக்காக ஆரம்ப கட்டமாக £9.54 மில்லியன் செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட சட்டவிரோத தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளில் Daily Mail பத்திரிகைகள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், நீதிபதி Matthew Nicklin கடந்த மாதம் அந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்தார்.
இதற்கு இளவரசர் ஹாரி, தீர்ப்பை “முழுமையான மற்றும் வெளிப்படையான உண்மையை மறைக்கும் நடவடிக்கை” என விமர்சித்தார்.
£9.54 மில்லியன் — ஆரம்ப சட்டச் செலவு மட்டுமே!*

