பாரிஸிலிருந்து வந்த 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
பிரான்ஸின் Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள Jablines-Annet பொழுதுபோக்கு மற்றும் நீராடும் மையத்தில் (Île de loisirs) மிகவும் துயரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாரிஸிலிருந்து தனது பெற்றோருடன் வந்திருந்த 5 வயது சிறுவன், கடந்த ஜூலை 25 (சனிக்கிழமை) மாலை நீரில் காணாமல் போனான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் அவனை நீரில் இருந்து மீட்டெடுத்தனர். அவசர மருத்துவக் குழுவினர் பல முயற்சிகள் செய்தபோதும், சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
இந்தச் சம்பவம் நடந்த பகுதி கண்காணிப்புடன் இயங்கும் கடற்கரைப் பகுதி என்றாலும், விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Jablines பொழுதுபோக்கு மையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உயிரிழப்புடன் முடிந்த நீரில் மூழ்கும் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு, கோடை காலத்தில் நீர்நிலைகளில் குழந்தைகளை ஒரு கணம் கூட கண்காணிப்பின்றி விடக்கூடாது என்பதற்கான மற்றொரு வேதனையான நினைவூட்டலாக அமைந்துள்ளது.

