ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு; கட்டடங்கள் சேதம்!
ஜப்பானைத் தாக்கிய ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் பல தொழிற்சாலை வளாகங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
குமமோட்டோவில் (Kumamoto) அமைந்துள்ள ஒரு பெரிய வர்த்தக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தமையினாலும், எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெடிப்புச் சம்பவத்தினாலும் பலரும் அதற்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ஜப்பானிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள், இராணுவத்தினர், வான் மற்றும் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

