நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பை நிராகரித்த சட்டத்தரணிகள் சங்கம்!
அனைத்து நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முன்மொழிவுக்கு எதிராக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) விசேட பொதுக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுயாதீனம், தன்னாட்சி உரிமை மற்றும் முறையான செயற்பாட்டு ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாப்பதைக் கருத்திற் கொண்டே இம்மாற்றத்திற்கு எதிராக இந்த வலுவான தீர்மானம் எடுக்கப்பட்டதாகச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு வயதில் மாற்றங்களை ஏற்படுத்துவது நீதித்துறையின் கட்டமைப்புச் சீரமைப்பைப் பாதிக்கலாம் என்ற அடிப்படையில் சட்டத்தரணிகள் சங்கம் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

