நாட்டின் நலனுக்காகக் கூட்டணி வைக்கத் தயார்: நாமல் ராஜபக்ச அதிரடி!
நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இரகசிய அரசியல் பேரங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியலை வெளிப்படையாகவே முன்னெடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனிநபர் நலன்களை விட நாட்டு மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் இணையலாம் என அழைப்பு விடுத்த அவர், சிலர் விலகிச் சென்றாலும் புதியவர்கள் இணைந்துள்ளதாகவும், கட்சியைப் பலப்படுத்த அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.

