கொழும்பு துறைமுகத்தில் புதிய 5 மாடி சுகாதார அலுவலகம் திறப்பு!
கொழும்பு துறைமுகத்தின் சுகாதார பரிசோதனைகள், நோய் கண்காணிப்பு மற்றும் எல்லை சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5 மாடி துறைமுக சுகாதார அலுவலகம் (Port Health Office) திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, துறைமுகங்கள் அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா ஆகியோர் இதனை நேற்று (28) திறந்து வைத்தனர்.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், சர்வதேச இடம்பெயர்வு அமைப்பினால் (IOM) ரூ. 168 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கப்பல்கள் பரிசோதனை, சுகாதார சான்றிதழ் வழங்கல் மற்றும் அவசர சுகாதார ஒருங்கிணைப்புகளை இப்புதிய அலுவலகம் முன்னெடுக்கும்.

