லா கோர்னவ் (La Courneuve) நகரில் 17 கடைகள் மூடப்பட்டதை நியாயப்படுத்தும் சென்-சென் ட்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாண ஆளுநர்!

சென்-சென் ட்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள லா கோர்னவ் (La Courneuve) நகரின் ‘Quatre-Routes பகுதியில் உள்ள Paul-Vaillant-Couturier வர்த்தக வீதியில், கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் சுகாதாரத்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனைகள் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன.

அங்குள்ள சுமார் 30 கடைகளில் சோதனையிட்டதில், சுகாதார விதிகளை மீறியதற்காக 17 கடைகள் நிர்வாக உத்தரவின் பேரில் அதிரடியாக மூடப்பட்டன .

இவ்வளவு குறுகிய காலத்தில், ஒரே பகுதியில் இத்தனை கடைகள் குறிவைத்து மூடப்பட்டதன் பின்னணியில் அப்பட்டமான அரசியல் சதி (Cabale politique) இருப்பதாக, கடந்த மார்ச் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நகரின் புதிய நகரமுதவர் அலி டியுவாரா (Aly Diouara) பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

நகரமுதல்வரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குச் பதிலளித்த சென்-சென்ட்-டெனிஸ் மாகாண ஆளுநர் (Préfet) ஜூலியன் சார்லஸ் (Julien Charles) “இந்தச் சோதனைகள் மற்றும் அதிரடி நடவடிக்கைகளுக்கான முழுப் பொறுப்பையும் நானே முழுமையாக ஏற்கிறேன் (J’assume totalement).

நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் ‘மூர்க்கத்தனமாக’ (Acharnés) செயல்படுகிறோம் என்று அவர்கள் விமர்சித்தால், மக்களின் பாதுகாப்பைக் காப்பதில் நாங்கள் மூர்க்கத்தனமாகவே இருப்போம். இதில் எந்தவொரு குறிப்பிட்ட நகரமும் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை,” என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் அந்த மாவட்டத்தில் உள்ள 39 நகரங்களிலும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநரகம் (DDPP) மற்றும் ‘பியூரோ வெரிடாஸ்’ (Bureau Véritas) ஆகியவை இணைந்து சுமார் 1,564 அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளன. இதன் விளைவாக, மாவட்டம் முழுவதும் மொத்தம் 183 நிறுவனங்கள் மூடப்பட்டன.

இருப்பினும், இந்த மூடல் உத்தரவுகள் நிரந்தரமானவை அல்ல. குறைகளைச் சரிசெய்த பிறகு, அந்த 183 நிறுவனங்களில் 127 நிறுவனங்கள் இந்த ஆண்டிலேயே மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன.

அதேபோல, லா கோர்னவ் பகுதியிலும் மூடப்பட்ட 17 கடைகளில் 15 கடைகள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து, ஜூலை 23-ஆம் திகதி நிலவரப்படி மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன.

Recommended For You

About the Author: admin