பிரான்ஸின் வோக்ஸ்-என்-வெலான் (Vaulx-en-Velin): ஸ்கூட்டரில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி; 4 பேர் கைது!

பிரான்ஸின் லியோன் (Lyon) நகருக்கு அருகிலுள்ள வோக்ஸ்-என்-வெலான் பகுதியில், மின்சார ஸ்கூட்டரில் கட்டப்பட்டிருந்த கலாஷ்னிகோவ் ரக துப்பாக்கியை பிரெஞ்சு குற்றத்தடுப்புப் பிரிவு (BAC) காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
​’ரூ டி லா ரெபப்ளிக்’ (Rue de la République) சாலையில் நள்ளிரவில் ரோந்து சென்ற காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு சிறிய சரக்கு வாகனத்தைச் சோதனையிட்டனர்.

அப்போது, வாகனத்திற்குள் இருந்த மின்சார ஸ்கூட்டருடன் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கலாஷ்னிகோவ் ரகத் துப்பாக்கி பிணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

​இதையடுத்து வாகனத்திலிருந்த 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே காவல் துறையின் குற்றப் பதிவேட்டில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிராந்திய குற்றவியல் பிரிவு (DCT) காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். See less

Recommended For You

About the Author: admin