மேற்காசியாவில் நிலவிவரும் போா் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மெக்கா கூட்டுப் பாதுகாப்பு!!

மேற்காசியாவில் நிலவிவரும் போா் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மெக்கா கூட்டுப் பாதுகாப்பு!!

ஈரான் அதிகாரிகளுடன் அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய ‘மெக்கா’ பாதுகாப்புக் கூட்டணி நாடுகளின் பிரதிநிதிகள் திங்கள்கிழமை முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

 

‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ ஒப்பந்தத்தில் கடந்த ஆகஸ்டில் கையொப்பமிட்ட இந்த 3 நாடுகளுக்கும்,

 

ஈரானுக்கும் இடையே நடைபெறும் முதல் உயா்நிலை சந்திப்பு இதுவாகும்.

 

இந்தப் பேச்சுவாா்த்தையில் சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சா் இளவரசா் காலித் பின் சல்மான், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீா், துருக்கி உளவுத் துறை தலைவா் இப்ராஹிம் கலின் ஆகியோா் பங்கேற்றனா்.

 

இவா்களுடன் ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட அந்நாட்டுத் தலைவா்கள் ஆலோசனையில் ஈடுபட்டனா்.

 

‘பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் அண்மையில் டெஹ்ரான் சென்றிருந்தபோது முன்மொழியப்பட்ட இந்தச் சந்திப்பு,

 

பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதல் படியாக அமையும்’ என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி தெரிவித்தாா்.

 

‘மீண்டும் ஒரு ராணுவ மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பேச்சு வழிகளைத் திறப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம்’ என சவூதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin