புதிய ஐரோப்பிய தஞ்சக் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது !
ஜூன் 2026 முதல் பிரான்ஸ் தனது எல்லைப்புறத் தஞ்ச நடைமுறைகளை (Procédure d’asile à la frontière) மிகக் கடுமையாக்கியுள்ளது.
இது தொடர்பாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்:
ஒருவர் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரவந்து விமான நிலையம் உட்படட எல்லைகளில் பிடிபடும் போது முன்னையை நடைமுறை போல விசாரித்துவிட்டு வெளியே விடமாட்டார்கள் .
அவர்களை தங்க வைப்பதற்காக பாரிஸ் றுவாசி சார்ள்ஸ் து கோல் (Roissy-Charles de Gaulle°) விமான நிலையத்திற்கு
அருகே ஒரு தங்குமிடம் உருவாக்கப்பட்டுள்ளது OFII யால் நிர்வகிக்கப்படும் இந்த தங்குமிடத்தில் இருந்து அனுமதி பெற்று (மொழி பெயர்ப்பு செய்தல் முதலான அவசர தேவைகளை கூறி *) வெளியே செல்லலாம்
.ஆனால் இந்த தங்குமிடத்திற்கு 48 மணிநேரத்திற்குள் திரும்பி சென்றுவிட வேண்டும். செல்லாவிட்டால் அவரது அரசியல் தஞ்சக் கோரிக்கை இரத்து செய்யப்படும்.மீண்டும் கோர முடியாது.
அதேபோல 48 மணிநேரத்தில் Ofpra நேர்காணலுக்கான அழைப்பு மின்னஞ்சல் வழியாக வரும். நேர்காணல்கள் காணொளி (Visioconférence) மூலம் விரைவாக நடைபெறும்.
நேரடியாக ஒரு அதிகாரி வந்து விசாரிக்க மாட்டார் .
நேர்காணலின் முடிவு ஒருவாரத்துக்குள் அனுப்பப்படும் .முடிவு நிராகரிக்கப்பட்டு வந்தால் அதை எதிர்த்து உடனடியாக CNDA மனு செய்ய வேண்டும்.
CNDA ஒரு வாரத்துக்குள் இந்த மனுவை விசாரிக்கும். இந்த விசாரணைக்கு ofii தங்குமிடத்தில் இருந்து காவல் துறையினர் தான் அழைத்து செல்வார்கள் . (இதற்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்க உரிமையுள்ளது.)
விசாரணை முடித்ததும் காவல்துறையினர் அவரை ofii தங்குமிடத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வார்கள்.
இந்த விசாரணையின் முடிவும் விரைவாக அனுப்பப்படும் ஒட்டுமொத்த விசாரணையும் வெறும் 15 நாட்களுக்குள் முடிக்கப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவருக்கு எல்லைக் காவல் படை (PAF) அல்லது சுங்கத்துறை (Douane) உடனடியாக நாட்டுக்குள் நுழையத் தடை விதித்து, வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புவார்கள்

