கோடை விடுமுறை தொடக்கம் – இல்-து-பிரான்ஸ் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்ப்பு

கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் பகுதிகளில் இருந்து
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதால், இந்த வார இறுதியில் முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று பிரான்ஸ் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக A10, A6, A13, A86 உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை அதிக நெரிசல் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்காக தெற்கு மற்றும் மேற்குப் பிரான்ஸ் நோக்கிப் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும்.

இதனால் பயணிகள் இயன்றவரை உச்ச நேரங்களைத் தவிர்த்து பயணிக்கவும், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தவும், புறப்படுவதற்கு முன் நேரடி போக்குவரத்து தகவல்களைச் சரிபார்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

விமான நிலையங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களிலும் வழக்கத்தை விட அதிகளவிலான பயணிகள் வருகை தருவார்கள் என்பதால், கூடுதல் நேரத்தை ஒதுக்கி பயணத்தைத் திட்டமிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin