10 வயது சிறுவன்… உலக அறிவியலையே வியக்க வைத்த ஆய்வு!

வயது வெறும் 10…
ஆனால், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கவனிக்கும் அளவுக்கு ஒரு ஆய்வை செய்து சாதித்திருக்கிறான் ஜப்பானைச் சேர்ந்த ஜோ நாகாய் என்ற மாணவன்.

தான் வளர்த்த Swallowtail பட்டாம்பூச்சிகள் தன்னை அடையாளம் கண்டு அமைதியாக இருப்பதையும், காட்டில் இருக்கும் பட்டாம்பூச்சிகள் மட்டும் பறந்து செல்வதையும் கவனித்தான்.

“உருமாற்றத்திற்குப் பிறகும் பட்டாம்பூச்சிகளுக்கு நினைவுகள் இருக்குமா?” என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது.
இந்த ஆர்வமே அவனை அமெரிக்காவின் பூச்சியியல் நிபுணர் டாக்டர் மார்த்தா வைஸ் அவர்களைத் தொடர்புகொள்ள வைத்தது.

அதன்பிறகு, வீட்டிலேயே ஒரு சிறிய ஆய்வகத்தை அமைத்து, கம்பளிப்பூச்சிகளுக்கு லாவெண்டர் மலரின் மணம் மற்றும் மென்மையான அதிர்வை இணைத்து பயிற்சி அளித்தான்.

முடிவு என்ன தெரியுமா?

உருமாற்றம் அடைந்து புதிய மூளை உருவான பின்னரும் 70% பட்டாம்பூச்சிகள் லாவெண்டர் மணத்தைத் தவிர்த்தன!
அதிலும் ஆச்சரியம்…

அவற்றின் குஞ்சுகளும், பேரக்குஞ்சுகளும் கூட எந்தப் பயிற்சியும் இல்லாமல் அதே மணத்தைத் தவிர்த்தன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெறும் 10 வயதிலேயே 33 பக்க ஆய்வுக் கட்டுரையை தயாரித்து, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியுடன் இணைந்து International Congress of Entomology மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த ஆய்வு, “நினைவுகள் தலைமுறைகளைத் தாண்டி கடத்தப்படுமா?” என்ற புதிய கேள்வியை உலக அறிவியலின் முன் மீண்டும் கொண்டு வந்துள்ளது.

ஒரு குழந்தையின் ஆர்வம்… உலகமே பேசும் ஆய்வாக மாறியுள்ளது!

இந்த கண்டுபிடிப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை கமெண்டில் பகிருங்கள்.

Recommended For You

About the Author: admin