தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் அதிவேக வீரர் யுபுன் அபேகோன்!

தெற்காசியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரும், இலங்கையின் முன்னணித் தடகளச் சாம்பியனுமான யுபுன் அபேகோன், அனைத்துவிதமான தடகளப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச அரங்கில் இலங்கைக்காகப் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த இவர், தனது இந்த திடீர் ஓய்வு முடிவை விளையாட்டு ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவரின் இந்த ஓய்வு அறிவிப்பு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் தடகள உலகினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Recommended For You

About the Author: admin