வவுனியாவில் நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில். 

வவுனியாவில் நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில்.

பொது சொத்துக்களை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றச்சம்பவம் தொடர்பான சந்தேகநபர் ஒருவரின் வழக்கின் கோவைகளை நீதிமன்றில் இருந்து சட்டவிரோதமான முறையில் கைமாற்றியது

அதற்கு உதவி புரிந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக வவுனியா விசேட குற்றத்தடுப்பு பொலிசாரால் நேற்றுமுன்தினம் நீதிமன்ற உத்தியோகத்தர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தார்.

 

கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவரை நேற்றயதினம் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

 

இதன்போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்

 

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரும் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin