பிரான்ஸில் வார இறுதியில் மீண்டும் உயரும் வெப்பநிலை – தயாராகுமாறு மக்களுக்கு எச்சரிக்கை

பிரான்ஸில் வார இறுதியில் மீண்டும் உயரும் வெப்பநிலை – தயாராகுமாறு மக்களுக்கு எச்சரிக்கை

பிரான்சில் தற்போது தற்காலிகமாக வெப்பநிலை சற்று குறைந்திருந்தாலும், இந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்காது என வானிலை ஆய்வு மையமான Météo-France எச்சரித்துள்ளது

 

. குறிப்பாக, கடந்த புதன்கிழமை தென்கிழக்கு பிராந்தியங்களில் கடும் வெப்பம் நீடித்தது. Rhône பள்ளத்தாக்கு, Languedoc, Provence மற்றும் Corse பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் வெப்பநிலை 30 முதல் 35 பாகை செல்சியஸ் வரை பதிவானது.

 

இதனைத் தொடர்ந்து, இன்று முதல் மீண்டும் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

தென் பிராந்தியங்களை மையமாகக் கொண்டு தொடங்கும் இந்த புதிய வெப்ப அலை, மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதிகளில் 33 முதல் 35 பாகை வரை வெப்பநிலையை உயர்த்தக்கூடும்.

 

இந்த அதீத வெப்பநிலை படிப்படியாக நாடு முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

 

வரவிருக்கும் வார இறுதிக்குள், பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸைக் கடந்து பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறிப்பாக நாட்டின் தெற்குப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும், அங்கு வெப்பநிலை 35 பாகையைத் தாண்டிச் செல்லக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அடுத்த வாரத்திலும் நிலையான அதிக அழுத்த வானிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக Météo-France குறிப்பிட்டுள்ளது.

 

இதனால், வழக்கமான பருவகால சராசரியை விட வெப்பநிலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த வெப்ப அலையின் தாக்கம் நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்பதால், மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Recommended For You

About the Author: admin