குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 உதவித்தொகை!
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறப்புக் கல்வித் தேவைகள் கொண்ட தகுதியான மாணவர்களுக்கு, மாதாந்தம் ரூ.5,000 கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
📌 இந்தத் திட்டத்தின் மூலம் சிறப்புக் கல்வித் தேவைகள் கொண்ட மாணவர்களின் கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு குடும்பங்களுக்கு ஓரளவு நிதி ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
💡 கல்வியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

