பிரான்சின் குடியரசு தினக் கொண்டாட்டம்: 1,600 ஆளில்லா வானூர்திகளுடன் ஒரு நாள் முன்னதாகவே ஒளிரவுள்ள வானவேடிக்கை!

பிரான்சின் குடியரசு தினக் கொண்டாட்டம்: 1,600 ஆளில்லா வானூர்திகளுடன் ஒரு நாள் முன்னதாகவே ஒளிரவுள்ள வானவேடிக்கை!

இந்த ஆண்டு கோடைக்காலத்தின் முக்கிய நிகழ்வான ஜூலை 14 குடியரசு தினக் கொண்டாட்ட வானவேடிக்கைகள், வழமைக்கு மாறாக ஒரு நாள் முன்னதாகவே, அதாவது ஜூலை 13 ஆம் திகதியே Paris நகரில் நடைபெறவுள்ளன.

2016 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று Nice நகரில் நடந்த கோரமான தீவிரவாதத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நினைவேந்தலுக்கு உரிய மரியாதை செலுத்தும் விதமாகவே இந்தத் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கம் போலவே Tour Eiffel அருகே உள்ள Champ-de-Mars மைதானத்தில் இந்த மாபெரும் கண்கவர் நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது. கடந்த ஆண்டு ஆயிரம் ஆளில்லா வானூர்திகளைக் (Drones) கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, இம்முறை மேலும் பிரம்மாண்டமாக 1,600 ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு வானை ஒளிரச் செய்யவுள்ளது.

மொத்தம் பன்னிரண்டு வெவ்வேறு காட்சிகளாக இந்த வானவேடிக்கை அமையவுள்ளது. Paris மற்றும் Rome நகரங்களுக்கு இடையிலான நட்புறவின் 70-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், Marine nationale எனப்படும் பிரெஞ்சுக் கடற்படையின் 400-ஆவது ஆண்டு மற்றும் Seine நதியின் சிறப்பைப் போற்றும் வகையிலும் இந்த ஒளியமைப்புகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, Paris நகரின் புதிய நகர முதல்வரான Emmanuel Grégoire, பிரெஞ்சுக் குடியரசின் தாரக மந்திரமான “Liberté, égalité, fraternité” (சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்) என்பதை வலியுறுத்தும் மாபெரும் பிரச்சாரம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளார்.

இதற்காகப் புதிய காலத்திற்கேற்ப அனைவரையும் உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்ட பதாதைகள் , தலைநகரின் 1,500 கட்டடங்களின் முகப்புகளில் வருகிற புதன்கிழமை முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

Recommended For You

About the Author: admin