உலகெங்கிலும் மக்களை அதிகம் ஈர்க்கும் ‘கனவுப் பணிகள்’: 2026-இன் புதிய தரவரிசை!
“வளர்ந்து பெரியவனானதும் நீ யாராகப் போகிறாய்?” என்ற கேள்வி குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மைத் தொடர்ந்து வரும் ஒன்று. ஆனால், பெரியவர்களான பிறகும் உலகெங்கிலும் உள்ள மக்களின் கனவுப் பணி எதுவாக இருக்கும்? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, கூகுள் தேடல்களை அடிப்படையாகக் கொண்டு 2026-ஆம் ஆண்டிற்கான ‘உலகின் கனவுப் பணிகள்’ குறித்த சுவாரசியமான ஆய்வறிக்கை ஒன்றை Remitly நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலக மக்களின் விருப்பங்களைப் பார்க்கும்போது, புகழின் உச்சிக்குச் செல்வதும், கைநிறையப் பணம் சம்பாதிப்பதுமே பலரின் பெருங்கனவாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக, வெள்ளித்திரையில் தோன்றும் Acteur பணிதான் இன்றும் உலக அளவில் பலரின் முதல் தேர்வாக இருந்து வருகிறது. அதற்கடுத்தபடியாக, உலகைச் சுற்றிவரும் Pilote பணியும், ஆபத்தான சூழல்களில் உயிர்களைக் காக்கும் Pompier பணியும் பலரைக் கவர்ந்துள்ளன. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில், இணையம் மூலம் புகழும் பணமும் ஈட்டித்தரும் Youtubeur ஆக வேண்டும் என்ற ஆசையும் இளைய தலைமுறையினரிடம் பெருமளவு காணப்படுகிறது. விலங்குகள் மீதான அதீத அன்பால் Vétérinaire பணியும் பலரை ஈர்த்துள்ளது.
இவற்றைத் தொடர்ந்து, வானில் வலம் வரும் Stewart / Hôtesse de l’air, வீடுகளை விற்கும் Agent immobilier, மற்றும் இரவுகளை இசையால் நிரப்பும் DJ போன்ற பணிகளும் மக்களின் கனவுத் தொழில்களாக மாறியுள்ளன. காலங்காலமாகக் கெளரவமான பணியாகக் கருதப்படும் மருத்துவர் (Médecin) மற்றும் செவிலியர் (Infirmier) ஆகிய பணிகள் முறையே பதினாறாவது மற்றும் பதினேழாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளன. யாருக்கும் கீழ் வேலை செய்யாமல் சொந்தமாகத் தொழில் தொடங்கும் Entrepreneur ஆசை இருபதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால், France நாட்டு மக்களின் மனநிலையோ உலக மக்களின் சிந்தனையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது நெஞ்சை நெகிழச் செய்கிறது. புகழ், பணம், பகட்டு என்பதைத் தாண்டி, பிறருக்கு உதவும் சேவை மனப்பான்மைக்கே பிரெஞ்சு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
France-இல் உள்ளவர்களின் முதல் கனவுப் பணி Pompier (தீயணைப்புப்படை வீரர்/வீராங்கனை) ஆக வேண்டும் என்பதே. அதற்கடுத்தபடியாக, நோயாளிகளைப் பராமரிக்கும் Infirmier (செவிலியர் )SAMU அவசரச் சிகிச்சை மருத்துவர், மற்றும் முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் Auxiliaire de vie (முதியோர்/மாற்றுத்திறனாளி பராமரிப்பாளர்) போன்ற மருத்துவமும் சேவையும் சார்ந்த உயிர்காக்கும் பணிகளையே இங்குள்ளவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். இவை தவிர Orthophoniste (பேச்சுப் பயிற்சியாள)ர், Policier போன்ற பொதுச் சேவைப் பணிகளும் பிரான்ஸ் மக்களின் விருப்பப் பட்டியலில் முன்னணியில் உள்ளன. ஒட்டுமொத்த உலகம் புகழை நோக்கி ஓடிக்கொண்டிருக்க, பிரான்ஸ் மக்கள் சேவையை நோக்கிப் பயணிப்பது உண்மையாகவே ஒரு நெகிழ்வான மாற்றம்தான்!
உலக அளவில் முதலிடம் பிடிக்கும் தொழில்கள்:
1. நடிகர் (Acteur):
2. விமானி (Pilote):
3. தீயணைப்பு வீரர் (Pompier):.
4. யூடியூபர் (Youtubeur):
5. கால்நடை மருத்துவர்
6 விமானப் பணிப்பெண் / பணியாளர் (Stewart / Hôtesse de l’air):
7.ரியல் எஸ்டேட் முகவர் (Agent immobilier):
8 DJ (இசைத் தொகுப்பாளர்):
9 மருத்துவர் (Médecin):
10 செவிலியர் (Infirmier):
11 தொழில்முனைவோர் (Entrepreneur):
இவை தவிர வழக்கறிஞர், நீதிபதி, காவலர், விண்வெளி வீரர், அரசுத் தரப்பு வழக்குரைஞர், குரல்வழி நடிகர் (Doubleur voix) போன்ற பணிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
🇫🇷 பிரான்ஸ் நாட்டின் தனித்துவமான தேர்வு: ‘
தீயணைப்பு வீரர் (Pompier)
செவிலியர் (Infirmier)
விமானப் பணிப்பெண் / பணியாளர் (Stewart / Hôtesse de l’air)
SAMU அவசரச் சிகிச்சை மருத்துவர்
ரியல் எஸ்டேட் முகவர் (Agent immobilier)
விமானி (Pilote)
பேச்சுப் பயிற்சியாளர் (Orthophoniste)
காவலர் (Policier)
நடிகர் (Acteur)
முதியோர்/மாற்றுத்திறனாளி பராமரிப்பாளர் (Auxiliaire de vie)

