சுப்பிரமணி முல்லைத்தீவு ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இதுவரை 470 கிலோ மீற்றர் பயணம்
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் பாதயாத்திரை மேற் கொண்ட அடியார்கள் இன்று அக்கரைப்பற்று பிரதேசத்தினை வந்தடைந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பாதயாத்திரை குழுவின் வேல்சாமி சிங்கராஜா ஜெயராஜ் பாதயாத்திரை மேற் கொள்ள 05 நாட்கள் மாத்திரமே அனுமதி அளித்துள்ளனர் எங்களுடன் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறுவர்கள் வைத்திய தேவை உடைய அடியவர்கள் என பலரும் பயணிக்கின்றனர்.
எனவே யாத்திரை மேற் கொள்ள இனிவரும் காலங்களில் 10 நாட்களாவது தேவைப்படும் எனவே இது தொடர்பாக உரியவர்கள் கவனத்திற் கொண்டு இதனை செயற்படுத்துமாறும் தெரிவித்தார்.
மேலும் தங்களுடன் பயணிக்கும் சுப்பிரமணியம் எனும் செல்லப்பிராணி முல்லைத்தீவு மாவட்டம் ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இதுவரை சுமார் 470 கிலோ மீற்றர்கள் பயணம் செய்து அக்கரைப்பற்றை வந்தடைந்துள்ளது அதனை காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் கொண்டு செல்ல தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

