பல்வேறு அத்தியவசிய பொருட்களுக்கு அதிரடி விலைக்குறைப்பை அறிவித்த சதோச நிறுவனம்

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, சுமார் ஒன்பது அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைப்பதாக லங்கா சதோசா நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

இது ஜூன் 18 (வியாழக்கிழமை) இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விலை நிர்ணயத்தின் கீழ், கோதுமை மாவின் விலை ஒரு கிலோகிராமுக்கு 10 ரூபா குறைக்கப்பட்டு, ரூ. 169-லிருந்து ரூ. 159-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே மற்ற பொருட்களையும் விட மிக அதிகமான விலைக் குறைப்பாகும்.

அத்தோடு பொன்னி சம்பா அரிசிக்கு 6 ரூபாவும், சிவப்பு நாடு அரிசிக்கு 5 ரூபாவும், சம்பா சிவப்பு கெக்குலு அரிசிக்கு 5 ரூபாவும், உள்ளூர் வெள்ளை நாடு அரிசிக்கு 5 ரூபாவும், வெள்ளை கெக்குலு சம்பா அரிசிக்கு 5 ரூபாவும் மற்றும் வெள்ளை கெக்குலு அரிசிக்கு 3 ரூபாவும் என பல்வேறு அரிசி வகைகளின் விலைகளும் ஒரு கிலோகிராமுக்கு குறைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு கொண்டைக்கடலையின் விலை ஒரு கிலோகிராமுக்கு 5 ரூபாவும் வெள்ளை சீனியின் விலை ஒரு கிலோகிராமுக்கு 2 ரூபாவும் குறைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin