பிரான்ஸ் அதிபரின் விலை உயர்ந்த கடிகாரம் காணாமல் போய் உள்ளது
டிரம்புக்கு டுகாட்டி சூப்பர் பைக் பரிசு… சிரிப்பை வரவழைத்த பதில்!
பிரான்ஸில் நடைபெற்ற G7 உச்சி மாநாடு அரசியல் விவாதங்களால் மட்டுமல்ல, பல சுவாரஸ்யமான நிகழ்வுகளாலும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் முதலில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது விலை உயர்ந்த Bell & Ross கைக்கடிகாரத்தை காணாமல் போனதாக பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக தேடிய நிலையில், அது பின்னர் சோபா இடுக்கில் இருந்து மீட்கப்பட்டது.
அடுத்ததாக, இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, கடந்த நான்கு நாட்களாக புகைப்பிடிக்காமல் இருப்பதாக தெரிவித்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இத்தாலியின் புகழ்பெற்ற Ducati நிறுவனம் பிரத்யேக சூப்பர் பைக்கை பரிசாக வழங்கியது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “இதை ஓட்டும் வயது எனக்கு இல்லை…
என் பேரன், பேத்திகளுக்கு கொடுக்கிறேன்” என்று நகைச்சுவையாக கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு, இந்த ஆண்டின் G7 மாநாடு அரசியல் மட்டுமின்றி, மறக்க முடியாத சுவாரஸ்ய தருணங்களாலும் பேசுபொருளாகியுள்ளது

