யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய விபரங்கள்:
🔹 தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுதலை.
🔹 வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பு.
🔹 கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
​இலங்கை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமிகளில் இணைந்தது தொடர்பான விசாரணைக்கு அமைவாக, இன்று (17) ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
​நாளாந்த துல்லியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது பக்கத்தைப் பின்தொடருங்கள்!

Recommended For You

About the Author: admin