இன்றே ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் செய்ய துடிப்பதேன்? பதற்றத்தின் பின்னணியில் உள்ள ரகசியம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமைதான் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அதிரடி திருப்பமாக, இன்று அவசர அவசரமாக டிஜிட்டல் தளம் வழியாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன.
இதற்காக உலகளாவிய மத்தியஸ்த நாடுகள் இரவு பகலாகக் கடுமையாக உழைத்து வருகின்றன. இந்த அவசரத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையான அரசியல் காரணங்கள் என்ன என்பது உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப்பு காரணமா?
உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) உடனடியாகத் திறப்பதுதான் இந்த அவசரத்திற்குக் காரணம் என்று ஒரு தரப்பில் கூறப்பட்டாலும், அது மட்டுமே முழுமையான உண்மையாகத் தெரியவில்லை.
மாறாக, மிகக் கடினமான முயற்சிகளுக்குப் பிறகு தற்போது சாத்தியமாகியிருக்கும் இந்த ஒப்பந்தம், சற்றே தாமதித்தாலும் மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்டு முற்றிலும் கைநழுவிப் போய்விடுமோ என்ற அச்சமே மத்தியஸ்த நாடுகளை இன்று உந்தித்தள்ளுகிறது.
டிரம்பின் பொறுப்பற்ற பேட்டிகளும் ஊடக நெருக்கடியும் இந்த விவகாரத்தில் ஈரான் மிக அமைதியாகவும் நிதானமாகவும் காய்களை நகர்த்தி வருகிறது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்போ, “ஈரானை அப்படி செய்வேன், இப்படி செய்வேன்” என மிக ஆக்ரோஷமாகவும், ஒரு நாட்டின் தலைவருக்குரிய பொறுப்பற்ற விதத்திலும் ஊடகங்களுக்குத் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.
இதற்குப் பதிலடியாக ஈரானும் வம்புக்கு நின்றால், இந்த ஒப்பந்தத்தின் கதி அதோ கதிதான் என்ற அச்சம் நிலவுகிறது.
மேலும், ஊடகவியலாளர்கள் எழுப்பும் கூர்மையான கேள்விகளை அதிபர் டிரம்ப்பாலோ அல்லது அவரது குழுவினராலோ எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் ஏற்படும் அரசியல் அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அமெரிக்காவினதும் தனது சொந்தத் தரப்பினரதும் மானத்தைக் காப்பாற்றுவதற்காக டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் தூக்கி வீசக்கூடும் என்றே தோன்றுகிறது. இன்றைய அவரது ஊடகப் பேட்டிகள் அந்த ஆபத்தையே தெளிவாக உணர்த்துகின்றன.
இஸ்ரேலின் திரைமறைவு சதி வலை
மற்றொரு புறம், இந்த ஒப்பந்தம் எப்படியாவது முறிந்து போக வேண்டும் என்பதில் இஸ்ரேல் மிகத் தீவிரமான திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முதன்மைக் கருவியாக அவர்கள் பயன்படுத்துவது ஊடகங்களைத்தான். இஸ்ரேலின் ஏவலாளிகளாகச் செயல்படும் சில சர்வதேச ஊடகவியலாளர்கள் தான் டிரம்ப்பைச் சுற்றி வளைத்து, ஒப்பந்தத்திற்கு எதிரான கேள்விகளை எழுப்பி அவரைத் தூண்டிவிடுகிறார்கள்.
இதற்கிடையே, ஈரான் இப்போதும் தாக்குதலில் ஈடுபடுவது போன்ற செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. சற்று முன்னர் கூட, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலியப் படைவீரர்களைத் தாக்கியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஏன் இந்த அவசரம்?
இப்படி ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி, இஸ்ரேல் லெபனான் மீது நேரடித் தாக்குதலைத் தொடுத்தால், மொத்த அமைதிப் பேச்சுவார்த்தையும் நொடியில் சாம்பலாகிவிடும்.
இந்த ஒப்பந்தத்தைத் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நொடியும், அது நிறைவேறும் சாத்தியக்கூறுகள் குறைந்து கொண்டே செல்கின்றன.
இந்த ஆபத்தான சூழலைப் புரிந்துகொண்டதால்தான், வெள்ளிக்கிழமை வரை காத்திருக்காமல் ‘இன்றே, இப்பொழுதே’ இந்த ஒப்பந்தத்தை டிஜிட்டல் முறையிலாவது நிறைவேற்றி முடிக்க மத்தியஸ்த நாடுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன

