இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்த “மக்களின் மருத்துவர்” வரதராஜா அதிதீவிர சிகிச்சை பிரிவில்!

இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்த “மக்களின் மருத்துவர்” வரதராஜா அதிதீவிர சிகிச்சை பிரிவில்!

ஈழத்து மண்ணில் மரண ஓலங்களுக்கு மத்தியிலும், குண்டுச் சத்தங்களுக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைத் தன் கைகளில் தாங்கிய அந்த உன்னத மனிதன், இன்று மரணப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார் என்ற செய்தி ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் உலுக்கியுள்ளது!

“அவருக்காக பிரார்த்தியுங்கள்!” – மனைவியின் உருக்கமான முகநூல் பதிவு!

​வன்னியில் இறுதி மூச்சு வரை மக்களுடன் நின்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. வரதராஜா (Dr. T. Varatharajah) அவர்கள், தற்போது கனடா ரொறொன்டோவில் உள்ள ஒரு முன்னணி மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு (Severe Heart Attack) காரணமாக அவர் உயிருக்குப் போராடி வரும் நிலையில், அவரது மனைவி யோகப்பிரியா வரதராஜா முகநூலில் இட்டுள்ள பதிவு பார்ப்போர் நெஞ்சைக் கசிய வைக்கிறது….
​”வன்னி மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்களின் துயர் துடைத்த என் கணவர் இன்று தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்… மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களே, அவருக்காக உங்கள் பிரார்த்தனைகளை ஒன்று திரட்டுங்கள்!”

பதுங்கு குழிக்குள் வரலாறு படைத்த “தேசத்தின் மருத்துவ மகுடம்”!

​இன்று 2k கிட்ஸ்களும், சமூக வலைத்தளங்களும் கொண்டாடும் நிஜ “Real-Hero” இவர்தான்! 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில்…

♦️​மயக்க மருந்து கூட இல்லாமல் சத்திரசிகிச்சை – போதிய மருந்துகள், மின்சாரம் இல்லாத சூழலிலும், பதுங்கு குழிகளுக்குள் தற்காலிக மருத்துவமனை அமைத்து இரவும் பகலும் தூங்காமல் உயிர்களைக் காத்தவர்!

♦️​சர்வதேசத்தை அதிரவைத்த துணிச்சல் – குண்டுகள் தலைக்கு மேல் பறந்தபோதும், BBC, Al Jazeera போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு நேரடியாக போர்க்கால உண்மைகளை உரக்கச் சொன்ன அசகாய சூரன்!

🚨​கைது மற்றும் புலம்பெயர்வு – போரின் பின் கைது செய்யப்பட்டு, சர்வதேச அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டு கனடா சென்ற பின்பும் ஈழ மக்களின் சாட்சியமாய் வாழ்ந்தவர்!

🌊 உலகெங்கும் அலைமோதும் பிரார்த்தனைகள்!

​அன்று எமக்காக ஓடிய அந்த இதயத்திற்காக, இன்று ஒட்டுமொத்த தமிழ் உலகமும் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் “Get Well Soon Dr. Varatharajah” என்ற வாசகங்கள் ட்ரெண்டாகி வருகின்றன!

​”எம் தாயகத்தின் மருத்துவ மகுடமே… மீண்டு வாருங்கள்!

Recommended For You

About the Author: admin